ஜூலியா மனிஹுவாரி (Julia Manihuari's 29 வயது) என்ற மேற்படி பெண்ணின் மார்பகங்கள், அவருக்கு மூன்றாவது மகன் பிரசவமானதையடுத்து வேகமாக வளர ஆரம்பித்து இராட்சத உருவை அடைந்தது.
வட பெருவைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவியான ஜூலியா தனது மார்பகங்களின் அதீத வளர்ச்சி குறித்து குறிப்பிடுகையில், “என்னுடைய மார்பகங்கள் மிகவும் பாரமாக இருந்ததால் நான் எழும்ப முயற்சிக்கும் ஒவ்வொரு சமயம் மயக்கமடைந்தேன். அதனால், 6 மாத காலமாக படுத்த படுக்கையாக இருக்க நேர்ந்தது'' என்று கூறினார்.
இந்நிலையில் ஜூலியாவின் துர்ப்பாக்கிய நிலை குறித்து அறிந்த உள்ளூர் ஊடகமொன்று, மூன்று நாள் படகுப் பயணத்தை மேற்கொண்டு அண்மையிலுள்ள நகர மருத்துவமனையில் மருத்துவ உதவிபெற அவருக்கு நிதியுதவி அளித்தது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு முலைச்சுரப்பிகளில் அதீத வளர்ச்சியை ஏற்படுத்தும் Bilateral Gynecomastia என்ற நோய் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
அதையடுத்து மருத்துவர்கள் 6 மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் ஜூலியாவின் மார்பகப் பகுதியிலிருந்த சுமார் 35 இறாத்தல் நிறையுடைய தசையை வெட்டி அகற்றினர்.
இந்தத் தசையை அகற்றாவிட்டால் அவை நுரையீரல்களை நசுக்கி சேதப்படுத்துவதன் காரணமாக ஜுலியா இறக்க நேரிடும் என மருத்துவர்கள் தெவித்தனர்.
அறுவைச் சிகிச்சை தொடர்பில் ஜூலியா விபரிக்கையல், ““இந்த அறுவைச் சிகிச்சைக்கு முன் என் னால் எதையுமே செய்யடியாதிருந்தது.
எனது மார்புகள் காலைத்தொடும் அளவுக்கு இருந்தன. அவற்றின் பாரம் காரணமாக எனது முழு உடலுமே அழுத்தத்திற்கு உள்ளானது. மூச்சுவிட மிகவும் கஷ்டமாக இருந்தது. அறுவைச் சிகிச்சைக்குப் பின் பாரிய சுமையொன்று நீங்கியது போல் உள்ளது'' என்று கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக