இந்த தள்ளாத வயதில், அதுவும் சக்கர நாற்காலியில் அமர்ந்து காலத்தை கழித்த சினேனுக்கு எதிலுமே வெறுப்பு இன்றி, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இருந்தது. இயற்கை அழகை ரசிப்பது, வாழ்க்கையை விருப்புவெறுப்பின்றி அப்படியே ஏற்றுக் கொள்ளும் தன்மை அவரிடம் காணப்பட்ட அரிய குணங்கள். வெளிப்புற உலகையும் மிகவும் நேசித்து வந்தவர்.
கடந்த 2ம் திகதி மரணமடைந்தார். இதையடுத்து உலகின் மிகவும் வயதானவர் என்ற இடத்தில் தற்போது ஜப்பானைச் சேர்ந்த சியானோ ஹசேகாவா என்பவர் இடம்பிடித்து உள்ளார். இவருக்கு 113 வயது ஆகிறது. இவர்தான் ஜப்பானின் தற்போதைய மூத்த மனிதர். உலகிலேயே ஜப்பானில் தான் மனிதர்களது சராசரி வாழ்ந ¡ள் அதிகரித்து உள்ளது.
காமா சினேன் வாழ்ந்து வந்த ஒகினாவாவில் நிலவிய இதமான சீதோஷ்ண நிலை மற்றும் அவரது உணவுப் பழக்கம் தான் அவர் 114 ஆண்டுகள் வரை வாழ காரணம் என, ஜப்பானியர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். காமா சினேனுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெர்ட்ருட் பெயின்ஸ் என்ற பெண் தான் உலகின் மிகவும் மூத்த மனிதர் என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக