ஞாயிறு, 23 மே, 2010

நீழிவு நோயாளர்களுக்கு இன்சுலின் இன்ஹேலர்

ஆஸ்துமா நோயாளிகள் தங்கள் கைகளில் இன்ஹேலர் ஒன்றை வைத்துக் கொண்டு அடிக்கடி உறிஞ்சிக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இனி நீரிழிவு நோயாளிகளும் அவ்வாறு செய்யப் போகிறார்கள்.


ஊசி வழியாக இன்சுலினை செலுத்தும் முறைக்கு பதிலாக சுவாசத்தின் மூலம் இன்சுலினை உள்ளிழுக்கும் புதிய முறை மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் குறைபாடு இருப்பதால் அவர்களுக்கு ஊசி வழியாக இன்சுலின் செலுத்தப்படுகிறது. நாள்தோறும் இன்சுலின் போடுவதால் உடம்பை குத்திக் கொள்ளும் வலி நீழிவு நோயாளிகளுக்கு பெரும் அசௌகரியத்தை அளிக்கிறது.

வாய் வழியாக இன்சுலினை மருந்து வடிவில் எடுத்துக் கொள்ளலாம் என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது சுவாசம் வழியாக இன்சுலினை பவுடர் வடிவில் உள்ளிழுக்கும் முறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அப்ரசா என்ற மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தற்போது அமெரிக்காவின் மருந்து மற்றும் உணவு நிர்வாக அமைப்பான எஃப்டிஏவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இந்த மருந்து இரத்தத்தில் சர்க்கரை அளவை இயல்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்றும், டெக்னோஸ்பியர் என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது என்றும் விஞ்ஞானிகள் தெவித்தனர்.

உலர்ந்த பவுடர் வடிவிலான இந்த மருந்து நேரடியாக நுரையீரலுக்கு செல்கிறது.
பின்னர் அது ரத்தத்தில் கலந்து 12 தல் 15 நிமிடங்களுக்குள் செயல்படத் தொடங்குகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டிலேயே இன்ஹேல் செய்யும் இன்சுலின் கண்டுபிடிக் கப்பட்டது. இதற்கு எஃப்டிஏ ஒப்புதல் அளித்த போதிலும் அதைத் தயாரிக்கும் நிறுவனம் அதை உற்பத்தி செய்யாமல் நிறுத்திவிட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல