ஞாயிறு, 23 மே, 2010

இருதய நோயாளிக்கு தக்காளி

இருதய நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி. நாம் அன்றாடம் நமது உணவில் பயன்படுத்தும் தக்காளி விதைகளில் இருதய நோய் பாதிப்பை தடுக்கும் திறன் கொண்டவை என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெவிக்கின்றன.

தக்காளி விதைகளை ஒட்டி இருக்கும் ஜெலட்டினிலிருந்து பித்து எடுக்கப்பட்ட ஃப்ரூட்ஃப்ளோ என்ற பொருள் இரத்தம் கட்டியாவதைத் தடுத்து மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தம் கட்டியாவதைத் தடுக்க தற்போது பயன்படுத்தப்படும் ஆஸ்பிரின் மாத்திரைகளுக்கு இந்த /ப்ரூட்/ப்ளோ சிறந்த மாற்று என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அபர்தீன் ரோவெட் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன என்றும், 43 பேரிடம் கடந்த 7 மாதங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் இதில் இல்லை என்று தெரியவந்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானி ஸ்டீபன் மூன் தெவித்துள்ளார்.

ஆஸ்பிரின் உட்கொள்வதால் அல்சர் மற்றும் வயிற்றில் ரத்தப் போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஃப்ரூட்ஃப் ளோவில் இந்தப் பிரச்சினை எதுவுமே கிடையாது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல