ஞாயிறு, 23 மே, 2010

உணவுப்பொருட்களில் உள்ள மருத்துவக்குணங்கள்

நாம் சாதாரணமாக சாப்பிடும் எத்தனையோ உணவுப் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை அறிந்து தேவைக்கேற்ப சாப்பிட்டால் உணவே மருந்தாகும்.

வெள்ளரிப் பிஞ்சில் எந்த விட்டமின்களும் இல்லைதான். ஆனால் இதைச் சாப்பிடுகிற போது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது. இது ஜீரணத்தைத் தூண்டுகிறது.

சமையலில் பிரதானமாக உபயோகிக்கப்படும் வெங்காயம் ஒரு அருமருந்து. பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் முடக்குவாத நரம்பு நோய்கள் தாக்காமல் தடுக்கும்.

வாழைப்பழங்களில் சோடியம், கல்சியம், பொட்டாசியம் போன்ற பல வகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இதய அழுத்தம் ஏறாமல் சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.

கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பச்சையாகவே சாப்பிட்டு வரலாம். அது இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டிவிடுகிறது. வயிற்று இரைச்சலையும் குறைக்கிறது.

உளுந்து வடையை அதிகமாக சாப்பிட்டால் மூட்டுவலி போன்ற வாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகப்படுத்தும். மேலும், பசியை கெடுக்கும், உடலுக்கு அதிகமான குளிர்ச்சியை உண்டாக்கும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

ஏ, பி,சி, ஆகிய மூன்று விட்டமின்களும் நிறைந்த ஒரே பழம் வாழைப்பழம்.

கறிவேப்பிலையில் வாய்ப்புண் வராமல் தடுக்கும் ரைபோபிளேபின் என்ற சத்தும், சோகை நோய் வராமால் தடுக்கும் போலிக் அமிலச் சத்தும் நிறைந்துள்ளன.

வாழைத் தண்டு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும், சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் நீக்க வல்லது.

நகம் கடிக்கும் பழக்கம் தன்னம்பிக்கை இன்மையையும் நரம்புக் கோளாறுகளையும் காட்டுவதாக உள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல