ஞாயிறு, 30 மே, 2010

யார் இந்த பள்ளத்தூர் பாப்பா?

கோவிந்தம்மாள் என்கிற பள்ளத்தூர் பாப்பா என்பதுதான் மனோரமாவின் நிஜப் பெயர். அந்தமான் கைதி, என்ற நாடகத்தில் நடித்த போதுதான் மனோரமா என்ற பெயர் சூட்டப்பட்டது. காரைக்கு அருகில் உள்ள பள்ளத்தூர்தான் மனோரமா வளர்ந்த ஊர். ராஜமன்னார்குடி பிறந்த ஊர்.

1952ல் அரங்கேற்றம் செய்யப்பட்ட யார் மகன்? என்ற நாடகம்தான் முதல் நாடகம். கவிஞர் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை என்ற படத்தில்தான் நகைச்சுவை நாயகியாக மனோரமா அறிமுகமானார்.

இந்தப் படம் வெளியான ஆண்டு 1958 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி , சிங்களம் என இவர் நடித்த மொழிகளின் பட்டியல் இன்னும் நீளம். முதல்வர் கருணாநிதி எழுதிய உதயசூரியன் நாடகத்தில் கருணாநிதி நாயகனாக நடிக்க, நாயகியாக நடித்தவர் மனோரமா.

5,000க்கும் மேற்பட்ட நாடகங்கள் 1300 க்கும் மேற்பட்ட படங்கள் என நடித்த ஒரே ஆசிய கண்டத்து நடிகை மனோரமாதான். இந்த சாதனைக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

நடிகர் எஸ். எஸ். ஆர். நாடக மன்றத்தைச் சேர்ந்தவர்கள்தான் மனோரமாவை மணிமகுடம் நாடகத்துக்காக சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இந்த நாடகத்தை எழுதியவர் முதல்வர் கருணாநிதி. வேலைக்காரி, சிவாஜிகண்ட இந்து சாம்ராஜ்யம், ஓர் இரவு என அண்ணாவின் முக்கிய நாடகங்களில் நடித்தவரும் இவரே.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல