ஞாயிறு, 30 மே, 2010

பெண்ணின் கழுத்து வயரால் நெத்துக் கொலை கோடிக்கணக்கான பெறுமதிமிக்க நகை கொள்ளை

கரவெட்டி கிழக்கு தில்லையம்புலத்தில் சம்பவம்

கரவெட்டி கிழக்கு தில்லையம்புலம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பெண்ணைப் படுகொலை செய்து விட்டு அனைத்து நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கோடிக்கணக்கான பெறுமதியான நகைகள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மு .ப. 11.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஜெயபாலா விஜயலட்சுமி (வயது 54) என்பவரே படுகொலை செய்யப்பட்டவராவார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண் வீட்டிலிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெயாதவர்களே இவரது கழுத்தை வயரினால் இறுக்கி நெரித்துக் கொன்றுவிட்டு வீட்டி லிருந்த தங்கநகைகளையும் பணத்தையும் சுருட்டிக்கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, படுகொலை செய்யப்பட்ட மேற்படி பெண் தனது தாயாருடன் தனிமையில் வசித்துவந்துள்ளார். அவரது கணவரும் மகனும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

சம்பவதினம் இவரது தாயார் அயலில் உள்ள உறவினன் வீட்டுக்குச் சென்றதால் அச்சமயம் வீட்டுக்குள் நுழைந்த மேற்படி கொலையாளிகள் இவரது கழுத்தை வயர் ஒன்றினால் நெரித்துக்கொலை செய்து விட்டு வீட்டின் சகல பாகங்களிலும் சல்லடை போட்டு தேடி நகை பணம் அனைத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

இதேவேளை சுமார் 12 மணியளவில் உறவினர் வீட்டிலிருந்து திரும்பிவந்த தயாருக்கு மகள் கழுத்து நெரிபட்டு படுகொலை செய்யப்பட்டு இரத்தம் கக்கிய நிலையில் வீட்டின் முன்மண்டபத்தில் கிடந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மகளின் நிலையைக்கண்டு அலறியபோதே அயலவர்களுக்கு இவ் விடயம் தெரிய வந்துள்ளது கொலையாளிகள் குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்தமையால் அவரது வாயால் இரத்தம் ஓடி அங்கு உறைந்து காணப்பட்டது.

மேலும், இவர் நகை அடகுபிடிப்பதுடன் வட்டிக்கும் பணம் கொடுத்துவந்ததால் வீட்டில் பெருமளவு நகையும் பணம் இருந்திருக்கலாம் என்று அயலவர்கள் சந்தேகம் தெவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறை நீதிவான் திருமதி ஜோய் மகாதேவன் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
சடலம் பிரேத பசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நெல்லியடிப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல