கஷ்டப்படும் கலையுலகினருக்கு முடிந்தவரை அடிக்கடி உதவிகளைச் செய்து வருகிறார் (இருந்த இடம் அப்படி!).
சமீபத்திலும் அப்படி ஒரு உதவி செய்து நெகிழ வைத்துள்ளார்.
எம்.ஜி.ஆர் - சரோஜா தேவிநடித்த திருடாதே உள்பட ஏராளமான படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் லட்சுமணன். இவரது மனைவி சுசிலா. தற்போது சென்னை நந்தனத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். துணை நடிகையான சுசிலா 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்ற படத்தில் நடிகை சரோஜாதேவியுடன் இணைந்து நடித்து உள்ளார்.
சுசிலாவின் கணவர் லட்சுமணன் இறந்துவிட்டார். தற்போது சென்னை நந்தனத்தில் வசித்துவரும் சுசிலா வீட்டு வாடகைகூட செலுத்த முடியாமல் வறுமையில் வாடுகிறார். இதனால் வீட்டைக் காலி செய்யும்படி அவரை வீட்டு உரிமையாளர் கூறினார்.
எங்கு செல்வது... என்ன செய்வது என்று தவித்த சுசிலாவுக்கு, சரோஜா தேவியின் நினைவு வர, பெங்களூரில் இருக்கும் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டார்.
உடனே தயங்காமல், சாக்குப் போக்கு சொல்லாமல், ரூ.20 ஆயிரத்தை சுசிலாவுக்கு அனுப்பி வைத்தார் சரோஜாதேவி. தக்க சமயத்தில் சரோஜாதேவி செய்த உதவிக்கு சுசிலா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்....!
Thatstamil



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக