A massive statue of Jesus Christ in Ohio burned to the ground after being hit by lightning late Monday
இரு கரங்களையும் விரித்தவாறான இயேசுகிறிஸ்துவின் 60 அடி உயரமான திருச்சுரூபம் ஒன்று இடி மின்னலால் தாக்கப்பட்டு பற்றி எரிந்துள்ளது . இச்சம்பவம் மொன்றோவில் இடம்பெற்றுள்ளது. இத்தகவலை அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர். 'ராஜாதி ராஜன்' (The "King of Kings") என மகுடம் சூட்டப்பட்ட இந்தச் சுரூபம், ஒஹியோவின் பிரபலம் பெற்ற சித்திரக்காரர்களால் கடந்த 2004 ஆம் ஆண்டு சொலிட் ரொக் ஆலயத்தில் (Solid Rock Church) நிறுவப்பட்டது.
இரு கரம் விரித்தவறான இயேசுநாதரின் இந்தச் சுரூபம் 62 அடி உயரமும் 40 அடி அகலமும் கொண்டது.
ஒருவித பிளாஸ்டிக்கினாலும் கண்ணாடி இழையாலும் உருவாக்கப்பட்டு, இரும்பினால் சட்டமிடப்பட்டிருந்த இந்தச் சுரூபமே நேற்று செவ்வாய்க்கிழமை இடி, மின்னல் தாக்குதலுக்குள்ளானது.
சுரூபத்தைப் பற்றிய தீ சுற்று வட்டாரத்தில் பரவியபோதும், எவரும் இதனால் காயமடையவில்லை எனப் பொலிஸ் உயரதிகாரி மார்க் நியூ தெரிவித்தார்.
சுமார் 4000 அங்கத்தவர்களைக் கொண்ட இந்த ஆலயம், முன்னாள் குதிரை வர்த்தகர் லோரன்ஸ் பிஷப் தம்பதியரால் நிறுவப்பட்டது. இதனை நிறுவ அவர்களுக்கு சுமார் 250,000 அமெரிக்க டொலர் செலவானது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக