சிவப்புத் துணியைக் கண்டால் மாடு முட்டவே முட்டாது. அதை விசிறும்போதுதான் மாடு மிரளுகிறது. இதுதான் உண்மை.
சிவப்பு துணியை விசிறினால் மட்டுமல்ல, பச்சை, நீலம், மஞ்சள்... என்று எந்த நிறத்தில் உள்ள துணியை விசிறினாலும் மாடு மிரளும்; முட்ட வரும். அதுவும், சம்பந்தப்பட்ட மாட்டின் முன்பு விசிறினால் தான் அது மிரளும். மற்றபடி, துணியின் நிறத்திற்கும், மாட்டிற்கும் சம்பந்தமே இல்லை.
ஆனாலும், மற்ற நிறங்களைக் காட்டிலும் வெள்ளை நிறம் மாட்டிற்கு இன்னும் தெளிவாகத் தெரியும். வீட்டில் வளர்க்கும் மாடு, பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு எல்லாக் காட்சிகளும் கறுப்பு, வெள்ளை போல்தான் தெரியும். மற்ற நிறங்கள் மிருகங்களுக்கு தெரியாமல் போகக் காரணம், அவை இரவில் வேட்டையாடியதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக