செவ்வாய், 29 ஜூன், 2010

இத்தாலி சர்வாதிகாரி முசோலினியின் டைரி

இத்தாலி நாட்டை சேர்ந்த சர் வாதிகாரி பெனிடோ முசோலினி (Benito Mussolini).

இவர் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி சர்வாதி காரி ஹிட்லருடன் கூட்டணி அமை த்து உலக நாடுகளை அச்சுறுத்தி யவர்.

கடந்த 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாயில் இத்தாலியில் மக்கள் புரட்சி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் சுவிட் சர்லாந்துக்கு தப்பிச் செல்ல முயன் றார்.

அப்போது அவரையும் அவரது காதலியையும் பிடித்து மக்கள் அடித்துக் கொன்றனர். அதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக முசோலினி தனது ரகசிய டைரிகள், ஆவண ங்கள், கடிதங்கள் போன்றவற்றை சுவிட்சர்லாந்து எல்லையில் புதைத்து வைத்துள்ளார்.

அவற்றை ஒரு சூட்கேசில் வைத்து வடக்கு லேக்கோமா பகுதியில் உள்ள ஸ்புளுகா பள்ளத்தாக்கில் புதைத்து வைத்தது தெரிய வந்து ள்ளது.

உலகப் போரின் போது ஜெர்ம னியின் தூதரக அதிகாரியாக இருந்த ஹக்லியல்மோ டெல்லா மோர்ட் டினின் மகன் ரோக்கோ டெல்லா மோர்ட் இதை தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது தந்தை தெரி வித்ததாகவும் கூறியுள்ளார்.

ஹக்லியல்மோ டெல்லா முசோலினியின் மிக நெருங்கிய நண்பராக இருந்தார்.

அந்த ரகசிய கடிதங்கள் மற்றும் ஆவணங்கள், தான் கொல்லப் படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா விடம் சரண் அடைவதற்கு முக்கிய சான்றிதழ்களாக இருக்கலாம் என ரோக்கோ டெல்லா மோர்ட் தெரி வித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல