செவ்வாய், 29 ஜூன், 2010

எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி

சுவீடன் நாட்டின் மன்னர் கார்ல் 16வது கஸ்டாப் (64), ராணி சில்வியா (66) ஆகியோரின் மூத்த மகள் விக்டோரியா (Victoria 32). இவர் டேனியல் வெஸ்ட்லிங் (Daniel Westling 36) என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.



டேனியல் ஒரு சாதாரண குடி மகனாவார். உடற்பயிற்சி கற்றுத் தரும் பயிற்சியாளர். இவர் இள வரசி விக்டோரியாவுக்கு உடற் பயிற்சி கலையை கற்றுத்தர நியமிக் கப்பட்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இதற்கு முதலில் எதிர்ப்பு கிளம் பியது.

இவர்கள் திருமணத்துக்கு இள வரசி விக்டோரியாவின் பெற்றோர் திடீரென சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டாக் ஹோமில் உள்ள கதீட்ரல் தேவால யத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு திருமணம் நடந்தது.

இதில், இளவரசி விக்டோரி யாவின் பெற்றோர், அவரது சகோதரிகள் கார்ல் பிலிப் (31) மாடலின் (28) மற்றும் நோர்வே, டென்மார்க் நாடுகளின் இளவர சர்கள் மற்றும் இளவரசிகள் கலந்து கொண்டனர்.

சாதாரண குடிமகனை திருமணம் செய்து கொண்ட விக்டோரியா அடுத்து முடிசூடப் போகும் பட்டத்து இளவரசியாவார்.
Image Hosted by ImageShack.us

1 கருத்து:

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல