வெள்ளி, 4 ஜூன், 2010

சோனியா காந்தி பற்றி புத்தகம் எழுதிய எழுத்தாளருக்கு வக்கீல் நோட்டீஸ்

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நகரைச் சேர்ந்த எழுத்தாளர் ஜாவியெர் மோரோ (Javier Moro's). இவர் சோனியா காந்தி பற்றி ‘சிவப்பு சேலை’ ('The Red Sari') என்ற தலைப்பில் சோனியா காந்தியின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு ஒரு கதைப் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.

இத்தாலி, பிரெஞ்ச், டச் மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டு உள்ளன. ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு, வெளியிட தயாராக உள்ளது.

சோனியா காந்தி பற்றி எழுத, அதன் ஆசிரியர் அனுமதி வாங்கவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு வக்கீல் நோட்டீசு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவருமான அபிஷேக் சிங்வி தெரிவித்தார். முன்னதாக அவர் சோனியா காந்தியை இது தொடர்பாக சந்தித்து பேசினார்.

இதற்கிடையே இந்த புத்தகத்தை இந்தியாவில் வெளியிடக் கூடாது என்று சிங்வி மிரட்டல் விடுத்து இருப்பதாக புத்தக ஆசிரியர் மோரோ குற்றம் சாட்டியுள்ளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல