புதன், 23 ஜூன், 2010

அதிகம் சம்பாதிப்பவர்கள் உயரமான பெண்களே!

குள்ளமான பெண்களைவிட உயரமான பெண்களே அதிகமாக சம்பாதிப்பதாக இங்கிலாந்து ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. லண்டனைச் சேர்ந்த முன்னணி ஆடை நிறுவனமான லாங் டால் சாலி’, 1,461 பெண்களிடம் விரிவான ஆய்வு நடத்தியது. அவர்களது உயரம், வருமானம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

உயரம் அடிப்படையில் பெண்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். உயரமான பெண்கள் பிரிவில் 5 அடி 8 அங்குலத்துக்கு மேல் உயரம் கொண்டவர்கள் ஐந்தில் ஒருவர் அவர்களைவிட குள்ளமான பெண்களைவிட ஆண்டுக்கு ரூ. 20.4 இலட்சம் சம்பாதிப்பதாக தெரிவித்தனர். 5 அடி 8 அங்குலத்துக்கு கீழ் அதேநேரம் சராசரி உயரம் கொண்ட பெண்களில் 10 சதவீதத்தினர் இந்த அளவு சம்பாதிப்பது தெரிய வந்தது.

அதைவிட குள்ளமான பெண்கள், ஆண்டுக்கு சராசரியாக ரூ. 17 இலட்சம் மட்டுமே வருமானம் பெறுகின்றனர். அவர்களில் 90 சதவீதத்தினர் குறைவான உயரம் காரணமாக தங்கள் அழகில் திருப்தி இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், 5 அடி 8 அங்குலத்துக்கு மேல் உயரம் கொண்ட பெண்களில் 25 சதவீதத்தினர் தங்களது அழகில் திருப்தி தெரிவித்தனர்.

“உயரமான பெண்கள் அதிகம் சம்பாதிப்பது மட்டுமின்றி, தலைமை பதவிகளையும் வகிக்கின்றனர். தன்னைவிட உயரம் குறைந்தவர்களை கீழ் நோக்கி பார்த்துப் பேசும்போது கூடுதல் நம்பிக்கையைப் பெறுகின்றனர் என ஆய்வுக் குழு உறுப்பினர் அரின்னோ ஜேஹான் கூறியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல