வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் 50 வயது ஆகிவிட்டாலே ஏதாவது ஒரு நோய் மனிதனை ஆட்டிப் படைத்து விடுகிறது. ஆனால் எவ்வித நோயுமின்றி இன்று திடகாத்திரமாக 118 வயதாகியும் அதிசயமாக இந்தப் பாட்டி வாழ்ந்து வருகிறார்.
அவரது பெயர் அலமேலு. செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்த முருகேச ஆசாரியின் மனைவியான இவருக்கு 6 மகன், 6 மகள்கள். இவர்களில் தற்போது 2 மகன், 3 மகள்கள் மட்டுமே உயிரோடு உள்ளனர். 50-க்கும் மேற்பட்ட வாரிசுகள் கொண்ட அலமேலுவின் கணவர் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். தற்போது மகள்களுடன் வசிக்கும் அலமேலு கூறியதாவது:-
"எனது சொந்த ஊர் பாலப்பாடி ஆகும். இளம்வயதில் வீட்டில் நான் சும்மா இருக்க மாட்டேன். ஏதாவது விவசாய வேலையில் ஈடுபடுவேன். அந்தகாலத்தில் எங்கு சென்றாலும் மாட்டு வண்டியில் சென்று வருவோம். அப்படி ஒருமுறை திருப்பதி கோவிலுக்கு கூட மாட்டு வண்டியில் சென்று வந்துள்ளோம்." இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக