வெள்ளி, 2 ஜூலை, 2010

இதுவும் சிகரெட் குடிக்குமா?

இதுவும் சிகரெட் குடிக்குமா? எனும் போது உங்கள் மனதில் எதுவும் என கேள்வி எழுபம்பும். பொறுங்கள் விடயத்துக்கு வருகிறேன்,

இன்றைய விநோத உலகை மிகவும் ஆச்சரியத்துக்கு உட்படுத்தி இருப்பவை இந்த இரண்டு காக்கைகள். இவை மலேசியாவைச் சேர்ந்தவை. மனிதர்களுக்கு மட்டும் அல்ல காக்கைகளுக்கும் சிகரெட்டில் கொள்ளை ஆசை என்பதை இவை சொல்லாமல் சொல்கின்றனவா?

மலேசியாவுக்கு பிரித்தானியாவை சேர்ந்த கணவனும் மனைவியும் சுற்றுலா சென்றிருக்கிறார்கள்.அங்கு அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கூரை மேல் இறங்கிய இரு காக்கைகளும் கூரையில் இருந்த சிகரெட் பைக்கெற் ஒன்றில் இருந்து பொறுமையாக ஒவ்வொரு சிகரெட்டுக்களை எடுத்துக் கொண்டன.

அதை பார்த்த கணவன் – மனைவி இருவரும் ஆச்சரியம் அடைந்தனர்.அப்போது அவர்கள் அக்காட்சியைப் புகைப்படமாக எடுத்துக் கொண்டனர். அதற்குப் பின் வேறு இரு காக்கைகளும் வந்து சிகரெட்டுக்களை இவ்வாறு எடுத்துச் சென்றன என்று வியப்போடு கூறுகிறார்கள் இந்தப் பிரித்தானிய தம்பதியர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல