வெள்ளி, 9 ஜூலை, 2010

“பால்நிலையற்றவர் “ என நிரூபிக்க போராட்டம்

உத்தியோகபூர்வமாக உலகின் முதலாவது பால்நிலையற்ற (ஆணோ அன்றி பெண்ணோ அல்லாத) நபராக விளங்கும் பிரித்தானியரான நோரிமே வெல்பி, பிறப்புச் சான்றிதழில் தனது பாலற்ற நிலை நீக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமைகள் அதிகாகளிடம் முறையீடு செய்துள்ளார்.

ஆணாகப் பிறந்த அவர் 1999 ஆம் ஆண்டு தனது பாலியல் உறுப்புகளை அகற்ற அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.
இந்நிலையில் ஸ்கொட்லாந்தில் பிறந்து தற்போது அவுஸ்திரேலிய சிட்னி நகரில் வசிக்கும் நோக்கு கடந்த மார்ச் மாதம் பால்நிலை பால்நிலை குறிப்பிடப்பட வில்லை எனத் தெரிவித்து புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 3 வாரம் கழித்து நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் தமது முன்னைய தீர்மானத்தை மாற்றி “நோ ஒரு பெண்“ என குறிப்பிட்டு பிறிதொரு பிறப்புச் சான்றிதழை வழங்கினர்.
நோ 60 சதவீதம் பெண்ணாகவும் 40 சதவீதம் ஆணாகவும் உள்ளதாக அவர்கள் கூறினர்.

இந்நிலையில் நோரி (48 வயது), தனது பெண் என்ற நிலையை நீக்கி முன்பு போன்று பாலற்ற ஒருவர் என தனது நிலையை குறிப்பிட வலியுறுத்தி மேன்முறையீடு செய்துள்ளார்.
இது தொடர்பில் நோ விபரிக்கையில், ““அவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இரு வகையினர் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இது தவறானதாகும்'' என்று கூறினார்.
மனித உரிமை அதிகாகளால் இந்த முறையீடு தொடர்பான தீர்மானம் இந்த வருட இறுதியில் எடுக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல