வெள்ளி, 9 ஜூலை, 2010

உலகின் மிகவும் பருமனான நபர் மரணம்

உலகின் மிகவும் பருமனான மனிதனாக உலக சாதனைப் பதிவேட்டில் இடம்பிடித்திருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 854 இறாத்தல் நிறையுடைய டேவிட் ஹோன் மரணமானார். உடல் நிறையைக் குறைக்கத் தவறும் பட்சத்தில் உயிருக்கு ஆபத்து என டேவிட் ஹோனுக்கு (David Hone 48 வயது) மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே அவர் மரணமடைந் துள்ளார்.

தென் லண்டனிலுள்ள குரோய்டனில் வசிக்கும் டேவிட் ஹோன், மருத்துவர்களின் எச்சரிக்கையை செவிமடுத்து உடல் எடையைக் குறைக்கும் நடவ டிக்கையில் இறங்கியிருந்தார்.

எனினும் அவரது காலங்கடந்த முயற்சி பயனளிக்க வில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில், சம்பவதினம் கடும் சுகவீனமடைந்த இராட்சத உருவமுடைய டேவிட் ஹோனை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல தீயணைப்புப் படைவீரர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களை உள்ளடக்கிய குழுவொன்று வரவ ழைக்கப்பட்டது.
அவர் பார்ன்பரோவிலுள்ள பிரின்சஸ் ரோயல் மருத்துவமனையில் (Princess Royal hospital) விசேடமாக அமைக்கப்பட்ட பாரிய கட்டிலில் படுக்க வைக்கப்பட்டார். எனினும் அவரது பாரிய உடல் தசைகள் கட்டிலையும் தாண்டி வெளியில் தொங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அசையவோ அன்றி மலசலகூடத்துக்கு சுயமாக சென்று வரவோ அவரது பாரிய நிறை இடங் கொடுக்க
வில்லை. செய்வதறியாது திகைத்த மருத்துவர்கள் அவரை நகர்த்துவதற்கு பாரந்தூக்கி உபக ரணமொன்றின் உதவியை நாட நேர்ந்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல