அவர்கள் சென்ற இந்தக் கப்பல் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள கனேடிய கடற்படை தளம் ஒன்றுக்கு பாதுகாப்புப் படையினர் சூழ கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் கடந்த மூன்று மாதங்களாகக் கடற் பயணத்தை மேற்öகாண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எம் வி சன் சி என்ற இந்தக் கப்பல் கனேடிய கரை ஓரத்தை எட்டுவதற்கு முன்பதாக கடலில் வைத்தே கனேடிய கடற்படையைச் சேர்ந்த எச் எம். சி.எஸ். வின்னி பெக் என்ற கப்பல் இதனை இடைமறித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக கனேடிய பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக் டௌவ்ஸ் தெவித்துள்ளார்.
இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
தற்போது கப்பலில் பயணித்த 490 பேன் சுகாதார நலன் குறித்த விடயங்களே முன்னெடுக்கப்படுவதாக கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பலில் சென்றவர்களில் சிறு தொகையினரே நோய்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு விரைவில் அங்கிருந்து காம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் விக் டௌவ்ஸ் தெவித்துள்ளார்.
இவர்கள் ஆட்கடத்தலுக்கு உட்பட்டவர்களா அல்ல பயங்கரவாதிகள் அவர்களுக்கு மத்தியில் உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் டௌவ்ஸ் கூறினார்.
செய்தியாளர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய அவர் அகதிகளை கனடா வரவேற்று வந்துள்ளது. ஆனால் இந்த அகதிகள் முறைமையின் கீழ் பயங்கர குற்றவாளிகள் அல்லது பயங்கரவாதிகளுக்கு இடமளிக்கப் படமாட்டாது என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டியுள்ளது.
மனிதக் கடத்தல் போன்ற செயற்பாடுகளில் பயங்கரவாத அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பதைத் தடுக்கவோ மேலும் தடைச்சட்டங்களை ஏற்படுத்தவோ அரசாங்கம் தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டார். மேலதிக விவரங்கள் எதனையும் அவர் கூறவில்லை.
கனேடிய கரையோர சேவைகள் கவரமைப்பு கனேடிய சட்டத்திற்கமைய கப்பலில் உள்ளவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கும். அதற்கு அவசியமான காலம் எடுக்கும் என்றார் அவர்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தான எந்த தனிப்பட்டவர் அல்லது ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளவர் சம்பந்தமாக முழு அளவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டார்.
குடியேற்றவாசிகள் அனைவரும் இலங்கைத் தமிழர்களாக இருக்கலாம் என நம்பப்படும் அதேவேளை கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பி னர்களாகவோ உறவினர்களாகவோ இருக்கலாம் என கனேடிய அரசாங்கம் நம்புகிறது.
எம் வி சன் சி என்ற கப்பலில் வந்த குடியேற்றவாசிகள் கடந்த மே மாதம் தமது தாயகத்தை விட்டுப் புறப்பட்டு 90 நாட்களைக் கடலில் கழித்து கனடா நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு சற்று முன்னர் வேன் கூவர் தீவை அடைந்துள்ளார்கள்.
கனேடிய கரையோர சேவைகள் முகவர்கள் இவர்களிடம் கைவிரல் அடையாளங்கள், புகைப்படங்கள் என்பவற்றை குற்றச் செயல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களா என்றறிய எடுக்கவிருப்பதாகத் தெவித்துள்ளனர். இந்தப் பரிசோதனை 72 மணித்தியாலங்கள் எடுக்கும் எனவும் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கடினமானது எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எம் வி சன் சி கப்பலில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் பலரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மூன்று மாத காலமாக தகவல் எதுவும் இல்லாத காரணத்தால் கனடாவில் உள்ள இவர்களின் உறவினர்கள் நம்பிக்கையற்று இருந்து வந்ததாக கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித் துள்ளது.
இந்த 490 பேர்களுக்கு மத்தியில் குறுநடை போடும் ஆறு வயதுக் குழந்தையும் 80 வயதான ஒருவரும் இருந்ததாகவும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
ஆறு மாதக் கைக்குழந்தையொன்றும் கர்ப்பிணிப் பெண்கள் இருவரும் விக்டோரியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
காங்கிரஸின் டொரன்டோ அலுவலகம் தற்காலிக உதவிகளை வழங்குவதற்காக பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு பிரதிநிதிகளை அனுப்பியுள்ளது. சுமார் பத்துப் பிரதிநிதிகள் அங்கு சென்றிருப்பதாக வதன உதயம் தெவிரித்துள்ளார். தமது உறவினர்கள் குறித்து அறிய அநேக அழைப்புகள் வருவதாக அவர் கூறினார்.
குடியேற்றவாசிகள் விக்டோரியாவில் வில்கின்சன் வீதி சிறைச்சாலை மற்றும் விக்டோரியா அரசினர் வைத்தியசாலை உட்பட பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கனடாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர, கப்பலை திருப்பி அனுப்பாதது குறித்து கனேடிய அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியுள்ளார். மனிதக் கடத்தல் ஒரு பயங்கர நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.
சன் சி கப்பல் அகதிகளுக்கு சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க கனேடிய தமிழர் பேரவை ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. மனித நேயப் பணிகளில் ஈடுபட ஆர்வம் உள்ள உறவுகள் கனேடிய தமிழர் பேரவையுடன் 4162400078 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என பேரவை அறிவித்துள்ளது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக