இதை கவனித்த பயணிகள் அதில் வெடி குண்டு இருக்கலாம் என்ற பீதியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களும் வெடிகுண்டு பீதியில் சூட்கேசை திறக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து அங்கு வெடி குண்டு நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு சூட்கேஸ் திறக்கப்பட்டது. அப்போது அதில் இளம் பெண் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்பெண்ணின் அடையாளம் தெரியாமல் இருக்க பேனா மை உடல் முழுவதும் ஊற்றப்பட்டு இருந்தது.
இதுபற்றி மொகதிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் வந்த மர்ம பெண்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக