புதன், 4 ஆகஸ்ட், 2010

உலகில் நீளமான முடிக்காரர்

6.2 மீட்டர் நீள முடி


பெண்களுக்கு நீண்ட கூந்தலின் மீதுள்ள ஆர்வம் குறைந்து வருவதாலோ என்னவோ ஆண்கள் மத்தியில் நீளமாக முடி வளர்ப்பதில் கவனம் அதிகரித்துள்ளது. அதனால்தான் போலும் உலகில் நீளமான முடிவளர்த்து ஒரு ஆணே சாதனை படைத்திருக்கிறார்.

வியட்நாமைச் சேர்ந்த டிரான் வென் ஹேயின் முடியின் நீளம் 6.2 மீட்டர்களாகும். அவரின் முடி குழம்பிக் காணப்படுவதாலே அதன் நீளம் 6.2 மீட்டர் என கணிப்பிடப்பட்டுள்ள போதும், இதன் உண்மையான நீளம் 6.8 என்று கூறப்படுகிறது.

இவரின் பெயர் 2004 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டது. அப்பொழுது இவரின் முடியின் நீளம் 5.6 மீட்டர்களாக இருந்தது.

50 வருடங்களாக இவரின் முடி வளர்ந்து வருகிறதாம். சிறிய கிராமமொன்றில் சாதாரண வாழ்வு வாழ்ந்து வந்தார் டிரான். இவருக்கு முடியைப் பிய்த்துக் கொள்ளுமளவு பிரச்சினைகள் வந்ததுண்டு.

இவரால் மோட்டார் சைக்கிளிலோ காரிலோ பயணிக்க முடியாது. தலைக்கவசம் அணிய முடியாதிருப்பதே அதற்குக் காரணம். இதனால் சைக்கிளில்தான் பயணம் செய்கிறார் இவர். பயணம் செய்யும் போது டிரான் முடியை கூடை போல சுற்றிக் கட்டிக் கொள்கிறாராம்.

ஆனால், இந்த நீண்ட முடிக்காரர் தனது 79 ஆவது வயதில் அண்மையில் மரணமடைந்தார். அவருடன் அவரின் நீண்ட முடிச் சாதனையும் முடிந்து விட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல