வியாழன், 26 ஆகஸ்ட், 2010

சுற்றுலா பயணிகள் விசாவில் வந்து மலேசிய வீதிகளில் பிச்சையெடுக்கும் சீனர்கள்

மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் விசாவைப் பெற்றுவந்து வீதிகளில் பிச்சை யெடுத்து வரும் சீனக் குழுவொன்றை மலேசிய குடிவரவு அதிகாகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

கோலாலம்பூரில், பிறிக்பீல்ட்ஸ் (Brickfields) என்னும் இடத்திலுள்ள மாடிக்குடியிருப்பை செவ் வாய்க்கிழமை திடீரென முற்றுகையிட்ட பொலிஸார், 4 பெண்கள் உட்பட 14 சீனர்கள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டுள்ளதை கண்டறிந்துள்ளதுடன், அவர்களில் சிலரை பிடித்துச் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒரு சிலர் பிச்சை எடுப்பதன் மூலம் மாதமொன்றுக்கு 1000 மலேசிய றிங்கிட் வரை வருமா னமாக பெற்று வந்ததாக தெவிக்கப்படுகிறது.

40 வயதுக்கும், 80 வயதுக்கும் இடைப்பட்ட இந்த சீனக் குழு வினர் 12 மாதங்கள் தற்கொண்டு 4 மாதங்கள் வரையான காலப்பகுதிக்குள் மலேசியாவுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காலப் பகுதியில் அவர்களால் பிச்சை எடுத்து சம்பாதிக்கப்பட்டது என நம்பப்படும் 16000 றிங்கிட் பெறுமதியான பணத்தை அதிகாரிகள் அவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். பிடிபட்ட பெண்களில் ஒருவர் (சுமார் 40 வயது), பிச்சையெடுப்பதன் மூலம் மாதமொன்றுக்கு 8000 றிங்கிட் வரை சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்ததாலேயே அதனை தொழிலாக மேற்கொண்டதாக கூறினார்.

பிடிபட்டவர்களின் 10 பேரின் விசா காலா வதியாகியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல