செவ்வாய், 7 செப்டம்பர், 2010

ஜேர்மனியில் வான் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் காயம்

ஜேர்மனியில் Ehningen junction in the Böblingen District எனும் இடத்தில் வான் ஒன்று குடை சாய்ந்ததில் 12 தமிழர்கள் காயமுற்றுள்ளனர். மேசிடஸ் பென்ஸ் வானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேரும் பேர்லினில் உள்ள தமது உறவினர்கள் வீட்டுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவேளை லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிசார் கூறியுள்ளனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் Mercedes Sprinter ஒன்றில் பயணித்து வந்தபோது அது Mercedes truck ஒன்றுடன் மோதுண்டது.

ஆயினும் Mercedes Sprinter இன் சாரதி காயம் அடையவில்லை. காயம் அடைந்த இலங்கையர்கள் 12 பேரும் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். Mercedes truck பயணித்தவரும் காயம் அடைந்துள்ளார்.

காயம் அடைந்தவர்களை மீட்கின்றமைக்கு சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை எடுத்திருக்கின்றது. காயப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபட்டது.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல