பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் 60 பேர் வரையானோர் இப்பெருந்தொகைப் பணத்தை இம்முகாமையாளரூடாக நம்பிக்கையின் பேரில் அனுப்பி இருந்தனர்.
ஆனால் இப்பணம் அகதிகளைச் சென்றடையவே இல்லை என்பதுடன் முகாமையாளரையும் காணவில்லை. வவுனியா பொலிஸ் நிலையப் பொலிஸாருக்கு இம்மோசடி குறித்து எவரும் இன்னமும் எழுத்துமூலம் முறைப்பாடு செய்யவில்லை.
ஆயினும் அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் இம்மோசடி குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. பொலிஸார் இம்முகாமையாளரைத் தேடி வலை விரித்துள்ளார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக