Turbo texter.... Melissa Thompson
மெலிஸா தொம்ஸன் (Melissa Thompson 27) எனும் அப்பெண், முழு வசனமொன்றை டைப் செய்வதற்கு 25.94 விநாடிகளை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார்.
செல்லிடத் தொலைபேசியில் வேகமாக டைப் செய்வதை அளவிடுவதற்காக The razor-toothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human என்ற வசனத்தை கின்னஸ் நிறுவனம் தெரிவு செய்து வைத்துள்ளது.
இவ்வசனத்தை மெலிஸா தொம்ஸன் 29.95 விநாடிகளில் டைப் செய்து முடித்துள்ளார்.
தொம்ஸனுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க்லின் பேஜ் என்பவர் இந்த வசனத்தை 35.54 விநாடிகளில் டைப் செய்து சாதனை படைத்திருந்தார்.
மெலிஸா தனது காதலர் கிறிஸுக்கு தினமும் 40 அல்லது 50 குறுந்தகவல்களை அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவித்தார். ஆனால், அவர்கள் ஒன்றாக வசிக்கத் தொடங்கியபின் அதிக குறுந்தகவலை அனுப்புவதில்லையாம்.
எனினும், சம்சுங் நிறுவனம் கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சிக்குமாறு; அழைத்தபோது, அவர் வேகமாக டைப் செய்வதற்கேற்ப தனது விரல்களைப் பழக்கப்படுத்திக் கொண்டாராம்.
ஏனையோரைவிட மிக அதிக வித்தியாசத்தில் வேகமாக டைப் செய்து சாதனை படைத்துள்ளார் மெலிஸா.
புதிய உலக சாதனைக்கான சான்றிதழ் கின்னஸ் நிறுவனத்திடமிருந்து வரும்வரை காத்திருக்கின்றார் அவர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக