ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

குலுக்கல்கள் பலவிதம்

ஆம், கை குலுக்கலில் பல வகை உண்டு!

நல்ல கை குலுக்கலுக்கு என்று சில முறைகள் இருக்கின்றன. ஒருவர் கை குலுக்கும் விதத்தை வைத்தே அவரை எடை போட்டுவிடலாம்.

இனி நீங்கள் பிறருடன் கை குலுக்கையில் இந்த விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருங்கள்...

* பொதுவாக கை குலுக்க கையை நீட்டும்போது உங்கள் கை செங்குத்தாக இருக்கும் படி நீட்ட வேண்டும். குறிப்பாக தொழில் நிமித்தமான கை குலுக்கலுக்கு இது மிகவும் ஏற்றது. `நீங்களும் நானும் சமம்' என்ற பொருளைத் தருவது இது.


* நீங்கள் ஒரு சேவை நிறுவனத்தின் நிர்வாகியாகவோ, விற்பனைப் பிரதிநிதியாகவோ இருந்தால், உங்கள் வாடிக்கையாளருடன் கை குலுக்க உங்கள் கையை நீட்டும்போது உங்கள் கட்டை விரலை இலேசாகச் சாய்த்து, உங்கள் உள்ளங்கை சற்று சாய்வாக வானத்தைப் பார்த்ததைப் போல இருக்க வேண்டும். இது, நீங்கள் பிறரது சேவையை முக்கியமாகக் கருதுபவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர் என்பதையும் காட்டும்.

* உங்கள் உள்ளங்கை தரையைப் பார்த்தவண்ணம் இருக்கும்படி கை குலுக்குவது நீங்கள் பிறரை அடக்கியாள நினைப்பவர் என்பதைக் காட்டும் அறிகுறியாகும். இதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

* உள்ளங்கை முழுவதும் வானத்தைப் பார்த்தவாறு இருக்கும் வகையில் கை கொடுப்பதும் சிறப்பானது அல்ல. அது நீங்கள் தாழ்ந்து போவதைக் குறிக்கிறது. ஆனால் சிலர் இது பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவிப்பதாகவும் அர்த்தம் கூறுகின்றனர்.

* எதிராளியின் உள்ளங்கையில் உங்கள் உள்ளங்கை பதியும்படி பற்ற வேண்டும். இரண்டு அல்லது மூன்று முறைதான் குலுக்க வேண்டும்.

* கைகளை மிக வேகமாக உருவிக்கொள்ளக் கூடாது. அதேநேரம், எதிராளி பொறுமை இழக்கும் அளவுக்கு கையைப் பற்றிக் கொண்டிருக்கவும் கூடாது. மூன்று முதல் நான்கு வினாடிகள் வரை கையைப் பிடித்திருந்தால் போதும்.

* பெண்களுடன் சந்திப்பு நேர்ந்தால் அவர்கள் கை குலுக்க கை நீட்டினால்தான் ஆண்கள் கை நீட்ட வேண்டும். கை குலுக்கையில் கண்களை நேருக்கு நேர் சந்திப்பதும், புன்னகைப்பதும் அவசியம்.

சரியான கைகுலுக்கலே சிறப்பான அறிமுகத்துக்கு வழி என்பதை ஞாபகத்தில் கொண்டு கைகுலுக்குங்கள்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல