சனி, 11 செப்டம்பர், 2010

ஈராக் அதிபரின் கடைசி நாட்கள்

எட்டடி ஆழக் குழி. உள்ளே எட்டடி இடம் மட்டுமே இருந்தது. டோர்ச் அடித்துப் பார்த்தபோது அழுக்கு மூட்டையாக யாரோ படுத்திருப்பதுதான் முதலில் தெரிந்தது. ஒரு நபர் மட்டும் அந்தக் குழிக்குள் இறங்கினார். அங்கே படுத்திருந்த வயதான மனிதரைத் தொட்டுத் தட்டித் திருப்பினார். தாடிக்குள் உறங்கிய முகம். உறக்கத்தில் இருந்து விழித்த கண்கள் சிவந்திருந்தன. கலைந்த தலையில் எண்ணெய் பட்டுப் பல நாட்கள் ஆன தோற்றம். யாரோ பாவம் என்று அந்த வீரர் மேலேறி வந்துவிடுவதற்கான சாத்தியங்கள் நிறையவே இருந்தன. ஆனால் அமெரிக்க வீரரைப் பார்த்ததும், படுத்திருந்த மனிதர் சற்றும் பதறாமல் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

நான் சதாம் உசேன். ஈராக்கின் பிரசிடெண்ட்.

வெலவெலத்துப் போய்விட்டார்கள். துளி எதிர்ப் பில்லாமல் ஒரு தோட்டாகூட செலவில்லாமல் இப்படியா இவர் சிக்குவார். அந்த இடத்திலிருந்து உடனடியாக அவரை ஹெலிகொப்டரில் ஏற்றி ரகசிய இராணுவ முகாக்கு அழைத்துப் போனார்கள். ஏழரை லட்சம் அமெரிக்க டொலர் நோட்டுக்கள் நிரம்பிய சூட்கேஸையும் பறிதல் செய்தார்கள். நேரம் சரியாக எட்டரை மணி இருக்கும். செய்தியை முதலில் மோப்பம் பிடித்தது IRNA எனப்படும் ஒரு செய்தி ஏஜன்சி.

பிறகு பத்து மணியளவில் ஈராக்கின் இடைக்கால அரசு அதை உறுதி செய்தது. டோனி பிளேயர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தகவல் உண்மைதான் என்று உறுதி செய்யப்பட்டதை உறுதி செய்தார். அமெரிக்காவின் ஈராக்குக்கான சிறப்பு நிர்வாக அதிகாரி பால் ப்ரேமர் அதிகாரபூர்வமாக விஷயத்தை தெriவித்தார். Ladies and Gentlemen, We got Him!

நவம்பர் 5 2006ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்புறம் அது மேல் முறையீடு செய்யப்பட்டது. ஈராக்கின் கிரிமினல் சட்டம் சில விஷயங்களைச் சொல்கிறது. மேல் முறையீடு செய்யப்பட்டதிலிருந்து முப்பதாவது நாள் தீர்ப்பு சொல்லிவிட வேண்டும். தவிரவும் மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதிசெய்யப்பட்டால், எழுபது வயதைத் தாண்டியவர்கள் விஷயத்தில் மரண தண்டனை தவிர்க்கப்படவேண்டும்.

ஏப்ரல் 28, 1937ஆம் ஆண்டு பிறந்தவர் சதாம் உசேன். ஆகவே ஏப்ரல் 28, 2007ஆம் ஆண்டு அவருக்கு எழுபது வயது பூர்த்தியாகின்றது. ஆகவே அதற்குமுன். டிசம்பர் 30ஆம் திகதி 2006ஆம் ஆண்டு சதாம் தூக்கிலிடப்பட்டார். இந்த விஷயத்தில் எஞ்சியிருக்கக்கூடிய ஒரு மறுக்க முடியாத கேள்வி ஒன்று இருக்கிறது. சதாம் குற்றவாளியாக இருக்கலாம்... ஆனால் அவரைத் தண்டிக்க அமெரிக்கா யார்? Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல