பூர்ச் கலிவா' (Burj Khalifa) கட்டிடம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் என்ற நகரில் "பூர்ச் கலிவா' (Burj Khalifa) என்ற பெயர் கொண்ட கட்டிடத்தின் நிர்மாண வேலைகள் 21.09.2004 அன்று ஆரம்பிக் கப்பட்டது. இதன் கட்டிட வேலைகளையும் இயந்திரப் பொறியமைப்பையும் சிக்காகோ நாட்டைச் சேர்ந்த "ஸ்கிட்மோர் ஓவிங்ஸ், மெறில்' (Skidmore Owings and Merill of Chicago) என்ற நிறுவனம் ஏற்றுக்கொண்டது.
இதில் "அட்றியன் ஸ்மித்' (Adrian Smith) என்பவர் பிரதம கட்டிடக் கலைஞராகவும், "பில் பேக்கர்' (Bill Backer) என்பவர் பிரதம பொறியியலாளராகவும் தென் கொரியாவைச் சேர்ந்த "சம்சுங்' (Sumsung C&T) என்ற நிறுவனம் முதல்நிலை ஒப்பந்தக்காரராகவும் பணியாற்றினர். இத் திட்டத்தின் ழுச் செலவினங்களாக 1.5 பில்லியன் (US$ 1.5 Billion) அமெரிக்க டொலர் செலவானது.
இக் கட்டிடம் 160 மாடிகளுடன் 828 மீட்டர் (2,717 அடி) உயரத்துடன் எழுந்து நின்று மனிதனால் ஆக்கப்பட்ட உலகிலேயே அதியுயர் கட்டிட அமைப்பு என்று வானில் பறைசாற்றிக் கொண்டிருக் கின்றது. இக் கட்டிடத்தின் மாடிகளின் தளப் பரப்பளவு 334,000 சதுர மீட்டர் (3,595,100 சதுர. அடி) ஆகும்.
04.01.2010 அன்று இக் கட்டிடம் வெகு விமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது.
இதற்கு முன்பிருந்த "பூர்ச் டுபாய்' (Burj Dubai) என்ற பெயரை அன்றே "பூர்ச் கலிவா' (Burj Khalifa) என்ற பெயராகத் தற்போதைய ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியின் பெயரை கருத்தில் கொண்டு இப்புதுப் பெயர் மாற்றம் செய்தனர்.
கட்டுமானம் (Construction)
43 மீட்டர் நீளம் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட 192 கலவைப் பிழம்பு உருக்குத் தூண்கள் செய்வதற்கு 45,000 கன. மீட்டருக்கு (58,900 கன.யார்) மேற்பட்ட கலவைப் பிழம்பு பாவிக்கப்பட்டது. இது நிறையில் 110,000 தொன்கள் ஆகும். இவ்வாறான 192 தூண்களும் 50 மீட்டர் (164 அடி) ஆழத்தில் புதைக்கப்பட்டுக் கட்டுமானம் தொடங்கியது.
இக்கட்டுமானத்தில் ஒருமித்து 330,000 கன.மீட்டர் (431,600 கன.யார்) கலவைப் பிழம்பும், 55,000 தொன் உருக்குக் கம்பியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 22,000,000 மணித்தியாலங்களுக்கு மனித உழைப்பும் வழங்கப்பட்டது. மிக அடர்த்தியானதும் குறைந்த ஊடுருவ இடந்தரும் இயல்பான கலவைப் பிழம்பு இந்த அத்திவாரத்தில் பாவிக்கப்பட்டது. இக் கலவையை 19082007 வரை நீர் மின் ஆற்றல் மூலம் 532 மீட்டர் (1,745 அடி) வரை பீறிட்டுச் செலுத்தப்பட்டது. இதன்பின் மே மாதம் 2008இல் இருந்து கலவைப் பிழம்பை 156 ஆம் மாடி மட்டும் 606 மீட்டர் (1,988 அடி) உயரம்வரை குழாய் மூலம் வீச்சு முறையில் செலுத்தப்பட்டது.
மிகுதிக் கட்டிட அமைப்பான 157 ஆம் மாடியிலிருந்து 160 ஆம் மாடிவரை இலேசான உருக்கு உலோகத்தால் கட்டி முடிக்கப்பட்டது. இக் கட்டிடத்தைக் கட்டுவதற்கு 17062008 வரை 7,500 திறமையான தொழிலாளர்கள் வேலைக்கமர்த்தப்பட்டனர்.
தளத்திலிருந்து 160 ஆம் மாடிவரை 2,909 ஏணிப் படிகள் உள்ளன. இக் கட்டிடத்தில் குறித்த ஒரு நேரத்தில் 25,000 மக்கள் கூடக்கூடிய வசதிகள் உள்ளன. இங்கு 57 மின் ஏற்ற மாடங்களும் (Elevators) எட்டு (08) இயங்கும் படிக்கட்டு களும் (Escalators) பயனுறுநிலை இணைப் பில் இயங்குகின்றன.
கட்டிடப் பாங்கு (Architecture)
இத் திட்டத்தில் 4,000 தொன்னுக்கு மேற்பட்ட கட்டிட உருக்குக் கம்பிகள் பாவனைப் படுத்தப்பட்டுள்ளது. உட்கட்டிடத்தை 1,000க்கு மேற்பட்ட கலை வேலைப்பாடமைந்த படங்கள் அலங்கரிக்கின்றன. தலை வாயின் முகப்பில் உலகின் 196 நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு வெண்கலம், பித்தளை உலோகத்தால் உருமாதி அமைத்து அலங்கரித்துள்ளனர். வெளிப்பக்கத்தில் 142,000 சதுர மீற்ரர் (1,528,000 சதுர அடி) கொண்ட ஒளிக்கதிர்களை வாங்கி எறிகிற கண்ணாடி, அலுமினியம், மாசற்ற உருக்கு ஆகியவற்றை அணு ஆற்றல் எதிர்வு இயக்க அமைவில் உலோகப் பொறிகாப்பு முறையில் (Cladding) அமைக்கப்பட்டுள்ளன. இவ்வ மைப்பு டுபாய் நாட்டின் கோடைகால வெப்ப நிலையை எதிர்த்து நிற்கக்கூடியது. இதன்படி 160 ஆம் மேல் மாடியின் வெப்பம் கீழ் மாடியிலும் பார்க்கக் குறைந்த நிலையான 6 oC பாகை (43 oFபாகை) என்ற அளவைக் காட்டி நிற்கிறது. இதற்காக 26,000 கண்ணாடிப் பளிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வேலைக்காகச் சீனாவிலிருந்து 300 வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர்.
பராமரிப்பு (Maintenance)
24,348 சன்னல்களைக் கழுவிச் சுத்திகப் பதற்கு 40 ஆம், 73 ஆம், 109 ஆம் மாடிகளில் ஒவ்வொன்றும் 1.5 தொன் நீர் கொள்ளக்கூடிய மூன்று (03) கிடைநிலை இயந்திரச் சுழல் நிறைப் பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை கிடைநிலையாகவும், செங்குத்தாகவும் சுழன்று சன்னல்களைக் கழுவுகின்றன. 109 ஆவது மாடிக்குமேல் உள்ள சன்னல்களைக் கழுவுவதற்குப் பாரந்தூக்கும் பொறி நிறுவனம் வழமையான தொட்டில்களைப் பாவிக் கின்றது. கோபுரக் கூம்பில் அமைந்த சன்னல் கள் அனுபவம் பெற்ற 36 சன்னல் கழுவுனர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் ஒரு முறை கழுவ மூன்று (03) அல்லது நாலு (04) மாதங்கள் ஆகின்றது.
டுபாய் நீர்த்தாரை (Dubai Fountain)
இக்கட்டுமானத்துக்கு வெளியில் டுபாய் நீர்த்தாரையை 217 மில்லியன் அமெக்க டொலர் செலவில் அமைத்துள்ளனர். இது கலிவோனியா "வெற் டிசைன்' (WET Design California)என்ற நிறுவனத்தால் அமைக்கப் பட்டது. நீர்த் தேக்கம் 275 மீட்டர் (900 அடி) நீளள்ளது. இங்கு 6,600 வெளிச்ச விளக்குகளும் 50 வண்ண ஒளி எறிவுக் கருவி அமைவுகளும் (Projectors) பொருத்தப் பட்டுள்ளன. அராபி, உலக இசைகளுடன் ஆகாயத்தில் 150 மீட்டர் (490 அடி) உயரத் துக்கு நீரைப் பாய்ச்சிப் பரவசப் படுத்து கின்றது. இத்தேக்கத்தை "டுபாய் நீர்த் தாரை (Dubai Fountain) என்று 26.10.2008 அன்று அறிவிக்கப்பட்டது.
வான்குடை மிதவையாளர் (Parachutists)
வான்குடை மிதவையாளர்களான நஸ்சார் அல் நியாடி (Nasser Al Niyadi) இ ஓமர் அல் ஹெயிலன் (Omar Al Hegelan) ஆகிய இருவரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் முதல் வாரத்தில் "பூர்ச் கலிவா' கட்டிட உச்சியான 828 மீற்ரர் (2,717 அடி) உயரத்திலிருந்து தளத்திற்கு 90 செக்கனில் குதித்து உலகச் சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் மணித்தியாலத்துக்கு 220 கி.மீ. (140 மைல்) வேகத்தில் குதித்துள்ளனர். இவ்வண்ணம் இதுவரை எவரும் குதித்க வில்லை என்பது ஒரு செய்தி.
இம் மாடிகளில் வழித்தங்கல்மனை, குடி யிருப்பு, கூடல் அறை, அலுவலகம், உணவகம், இசை நிகழ்வு அரங்கு, திறந்த வெளி அரங்கு, இயந்திரப் பகுதி, நீராடு தடாகம் ஆகியனவும் உள்ளன.
திறப்புவிழா
கட்டிடத் திறப்புவிழா அன்று 10,000 வாண வேடிக் கைகளுடன், கட்டிடத்திலும் அதனைச் சுற்றிலும் வண்ண ஒளி வீச்சுகளை எறி செய்து, இன்னிசை நிகழ்ச்சிகள் பல பரப்பி, நீரை வானில் உயரப் பாய்ச்சி, 300 ஒளி எறிவுக் கருவிகளின் உதவி யுடன் கோபுரத்தின் கட்டமைப்பு றை களை இயக்க ஒளி நிழற் படங்களாகக் காட்டப்பட்டு விழாவைக் குதூகலமாக நடாத்தினர்.
திறப்புவிழா நிகழ்ச்சிகள் யாவும் அகன்ற காட்சித்திரை, பல தொலைக்காட்சிகள், நூற்றுக் கணக்கான ஊடகங்கள் ஆகியவற்றில் நேரடி அஞ்சல் செய்யப்பட்டன. இவ் விழாவில் சுமார் 6,000 விருந்தினர் பங்கேற்றனர்.


















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக