வியாழன், 23 செப்டம்பர், 2010

தற்கொலை செய்வதற்காக தனக்கென்று ஒரு ஜோடியை இணையதள வாயிலாக தெரிவுசெய்து, இருவரும் கூட்டாக தற்கொலை (படங்கள் இணைப்பு)

இணைந்து தற்கொலை செய்வது எப்படி என்று இணையத்தளத்தில் உள்ள தற்கொலைக்கான கருத்துக்களம்  ஊடாக பிரித்தானிய பிரஜைகள் இருவர் (ஒரு ஆணும், ஒரு பெண்ணும்) உரையாடியுள்ளனர். ஒருவருக்கொருவர் நேரில் அறிமுகமற்ற அந்த இருவரும் தாம் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவிற்கு வந்து அதற்கான நாள் நேரம் இடம் ஆகியவற்றை தெரிவு செய்து கொண்டனர்.


சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒதுக்குப் புறமான தொழிற்சாலை ஒன்றிற்கு அருகாமையில் தமது காரை நிறுத்திவிட்டு, நச்சுத் திரவத்தையும், பதார்த்தங்களையும் உட்கொண்டு அவ்விருவரும் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர்.

திங்கட்கிழமை தொழிற்சாலைக்குச் சென்ற தொழிலாளி ஒருவர் இவர்கள் காரில் இறந்து கிடப்பதை அவதானித்து பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.


காரின் கண்ணாடிகளில், காருக்கு உள்ளே நச்சுத் திரவங்கள் இருப்பதாகவும், ஜாக்கிரதையாகக் கையாளவும் எனவும் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. கார் கதவுகளை திறந்தால் மூச்சுத் திணறல் ஏற்படலாம் எனவும் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து பொலிசார் அதிர்ந்து போனார்கள்.

அவர்கள் கடைசியாக உபயோகித்த கம்பியூட்டரில் இருந்து, தற்கொலைக்கு நான் தயார், அதற்காக நச்சுத் திரவங்களும் தயார் என்ற சட்டிங் வாசகங்கள் இருந்ததை கண்டனர் .

இறந்த அந்த பெண்ணுக்கு அனொரெக்ஸியா நேர்வொஸா எனும் வியாதி இருப்பதாகச் சொல்லப்பட்டலும், அது சாவுக்கு காரணம் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரணம் அந்த வியாதிக்காக அப்பெண் மேற்கொண்டுவரும் NHS சிகிச்சை நல்ல பலனை அளித்துள்ளதுடன் அவ்வியாதியிலிருந்து வெகுவிரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்று பொலிசார் தெரிவிக்கிறார்கள்.


மேற்கொண்டு விசாரணைகள் தொடர்கின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல