வியாழன், 23 செப்டம்பர், 2010

பெண்கள் அணியும் மார்புக்கச்சை (Bra / Brassiere) மிகவும் பலம் வாய்ந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு

தனது பண்ணையில் வளர்ந்து தொங்கும் முலாம்பழங்கள் கீழே விழுந்துவிடாமல் பாதுகாப்பதற்கு என்ன செய்யலாம் என ஆராய்ந்த பெண்ணொருவர் இறுதியில் அதற்கொரு வித்தியாசமான தீர்வை கண்டுபிடித்துள்ளார்.

தனது பிராவைப் பயன்படுத்தி முலாம் பழங்களை பாதுகாக்கலாம் என்பதே அவர் கண்டுபிடித்த தீர்வு.

பிரிட்டனைச் சேர்ந்த 45 வயதான ரோவி மீர்ஸ் என்பவர், அப்பழங்கள் மரத்திலிருந்து கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்காக 40 இற்கு மேற்பட்ட தனது உள்ளாடைகளை பழங்களில் பொருத்தியிருக்கிறார்.

சுவீன்டன் வில்ஸில் அமைந்துள்ள அவரது பண்ணையில், முலாம் பழங்கள் மிகப் பெரிதாக வளர்ந்து, பாரம் தாங்காமல் கீழே விழும் நிலையில் இருந்தனவாம்.

இது தொடர்பாக ரோவி குறிப்பிடுகையில் நாங்கள் அற்புதமான முலாம் பழங்களை வளர்க்கின்றோம். அந்தப் பழங்கள் அந்தரத்தில் தொங்கி கீழே விழுவதை தடுப்பதற்கு ஏதாவது செய்யவேண்டும் எனத் தோன்றியது.

இது பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது எனது மார்பகத்தைப் பார்த்தேன்.  எனது பிராவையே அப்பழங்களை தாங்கச் செய்வதற்குப் பயன்படுத்தலாம் என்ற யோசனை தோன்றியது. உடனே எனது பிராக்களை அந்தப் பழங்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்திக்கொண்டேன்.
இப்போது எனது வாடிக்கையாளர்கள் பலர்கூட இப்பழங்களை பாதுகாப்பதற்காக அவர்களது பழைய பிராக்களை எனக்கு அனுப்பி வைத்து உதவிப் புரிகின்றார்கள் என அவர் கூறியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல