வியாழன், 23 செப்டம்பர், 2010

கயிற்றின் மீது உறங்கும் மனிதர்

சீனாவை சேர்ந்த காவோ யாங் என்ற 37 வயதுடைய நபர், மரங்களுக்கிடையில் கட்டப்பட்ட சிறிய கயிற்றில் சுமார் 7 மணித்தியாலங்கள் நித்திரை செய்து சாதனைக்காக காத்திருக்கிறார். இரண்டு தென்னை மரங்களுக்கிடையில் சுமார் 10 அடி உயரத்தில் சிறிய கயிற்றினை கட்டி, அதில் லாவகமாக படுத்து உறங்கும் பயிற்சியை கடந்த 25 வருடங்களாக அவர் மேற்கொண்டு வருகிறார்.

சீனாவின் வடகிழக்கு மாகாணமாகிய லியோனிங்கை சேர்ந்த காவோ யாங், தனது 12ஆவது வயதில் குரு ஒருவரை சரணடைந்தார். அவரிடம் முறைப்படி பயிற்சிகளை கற்றுக்கொண்டார். உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தும் பயிற்சியை தனது 12ஆவது வயதிலிருந்தே கற்கத் தொடங்கிவிட்டார். கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்ட அவர், இப்பொழுது சாதனைக்காக காத்திருக்கிறார். சிறிய கயிற்றில் நிம்மதியாக உறங்கும் பயிற்சியில் வெற்றிபெற்றிருக்கும் யாங், எதிர்வரும் சில தினங்களில் கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல