போலியான தகவல்களை வழங்கி வெளிநாட்டு சட்டவிரோத குடியேற்றவாசிகள் வதிவிட உரிமை வழங்க உதவும் வகையில் பாரிஸை சேர்ந்த மேற்படி நபர் (54 வயது) மோசடி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆபிரிக்க வம்சாவளியான இந்த நபரின் பாரிஸிலுள்ள இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டில் பொலிஸார் திடீர் சோதனை நடத்தியபோது, 50 க்கு மேற்பட்டவர்களின் வதிவிடமாக மேற்படி வீடு பதிவு செய்யப்பட்டிருந்தமையை வெளிப்படுத்தும் ஆவணங்கள் மீட்கப்பட்டன.
இந் நபர் மேற்படி தாய்மார்களுக்கான வருடாந்த அரசாங்க கொடுப்பனவாக 1.27 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை பெறும் முகமாக இந்த மோசடியில் இறங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
தமது குழந்தைக்கு இந்நபரே தந்தையென உரிமை கோரிய 42 பெண்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
தான் அப்பெண்களை இரவு விடுதிகளில் சந்தித்ததாகவும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அடிக்கடி விஜயம் செய்து வருவதாகவும் அந்நபர் கூறினார்.
அப் பெண்களில் பலர் ஆபிரிக்க நாடுகளான செனகல், கமரூன் மற்றும் மாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக