ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

நெடுஞ்சாலையில் தவழ்ந்த குழந்தை (வீடியோ இணைப்பு)

துருக்கியில் உள்ள அன்டால்யா (Antalya) நகரில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரம் ஒரு பெண் தனது ஒரு வயது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு பிச்சை எடுக்க சென்று விட்டாள்.

அப்போது, கண் விழித்த குழந்தை தானாக தொட்டிலில் இருந்து இறங்கி ரோட்டில் தவழ ஆரம்பித்தது.

இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். நடுரோட்டில் குழந்தை தவழும் தகவலை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். இதனால் வாகனம் ஓட்டிகள் வேகத்தை குறைத்து குழந்தை மீது மோதாமல் கவனமாக சென்றனர்.

இதற்கிடையே, இந்த காட்சியை துருக்கி டி.வி.க்கள் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தின. அத்துடன் வாகன ஓட்டுனர்கள் பொலிஸாரை வரவழைத்து அக்குழந்தையை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்திய பின்னர் அக்குழந்தையை தாயிடம் ஒப்படைத்து, தாயையும் விடுதலை செய்தனர்.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல