சனி, 30 அக்டோபர், 2010

சாதாரண ஜலதோஷத்தால் 18 வயது மாணவி மரணம்

பிரித்தானியாவில் கெண்ட் பகுதியில் வாழும் 18 வயதாகும் டானியல்லெ புரூக்கர், எனும் பாடசாலைச் மாணவிக்கு திடிரென ஜலதோஷத்திற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. அதே நாளில் தலைவலியும் ஏற்பட்டுள்ளது.

சாதரணமாக ஜலதோஷமும் அதனால் உண்டான தலைவலியும் என நினைத்த சிறுமி அதுபற்றி பெரிதுபடுத்தாமல் இருந்துள்ளார். சில மணி நேரங்களுக்குப் பின்னர் மாணவியின் கை கால்களை அசைக்க முடியாமல் போனதுடன் அவருக்கு காக்கைவலிப்பு போன்ற வலிப்பும் ஏற்பட்ட சில நிமிடங்களில் நினைவிழந்து மயங்கி விட்ட அவரை உடனடியாக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முதலில் மெய்ட்ஸ்டோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பின்னர் லண்டனில் இருக்கும் கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எந்த முயற்சியும் பலனளிக்காமல் மாணவி இரண்டு நாட்களின் பின்னர் இறந்து விட்டார்.


இவரின் இறப்பு ஜலதோஷம் பரவக் காரணமாக இருந்த வைரஸ் மூளை வரை பரவியதால் தான் நிகழந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல