சனி, 30 அக்டோபர், 2010

முதலையிடம் மாட்டிக்கொண்ட் யானைக்குட்டி (படங்கள் இணைப்பு)

ஆபிரிக்க காட்டில் யானைக்குட்டி ஒன்று தண்ணீர் குடிக்கச் சென்றபோது, அந்த சதுப்பு நிலத்தில் மறைந்திருந்த முதலையிடம் மாடிக்கொண்டது. குட்டி யானையின் தும்பிக் கைகளை முதலை மிக இறுக்கமாக கவ்விப்பிடித்ததால் அது மூச்சுத்திணறலில் தவித்து அந்த யானைக்குட்டி பெரிதாக சத்தமிட்டு அலறத்தொடங்கியது.


இதனைக்கேட்ட மற்ற யானைகள் கூட்டமாக வந்து நிலத்தின் மீது பலமாக மிதித்து, பலமாக பிலிறி சத்ததை ஏற்படுத்தி நாலாபக்கமும் சுற்றி நின்று முதலையை நோக்கி பலிறிக்கொண்டிருந்ததை தொடர்ந்து ஒருவாறு அந்த முதலை குட்டி யானையின் பிடியை தளர்த்தியது.

பிடி தளந்ததும் யானைக்குட்டி தப்பியோடி தனது தாயுடன் இணைந்துகொண்டது.

வழமையாக முதலைகள் ஒருபோதும் யானையைக் குறிவைப்பது இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த முதலை யானையை உண்ண முனைந்தது அபூர்வமான விடயமாகவே கருதப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல