வான்கூவரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்நபர் மீதான யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்.
கனேடிய குடிவரவு சட்டங்களின்படி போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவாளியாகக் காணப்பட்ட எவரும் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்விவகாரத்தைக் கையாளும் கனேடிய எல்லை சேவை முகவரகம் இது தொடர்பாக தகவல் எதனையும் கூற மறுத்துள்ளது.
எனினும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில் 'இவ்விடயத்தில் நான் சொல்ல முடிந்தது என்னவென்றால், கனடாவானது கிரிமினல் செயற்பட்டாளர்களின் இலக்காக இருக்கும்போது நாம் வெறுமனே அமர்ந்திருக்கமாட்டோம் என்பதுதான்' என்றார்.
கனேடிய அகதிகள் சபையில் சுமார் 80,000 அகதிகளின் விவகாரங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கனேடிய சட்டமா அதிபர் 63,000 அகதிகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்களில் 41,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக