புதன், 3 நவம்பர், 2010

சவூதி உலமாக்கள் மூலம் ரிஸானாவுக்கு மன்னிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

சவூதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூதூரைச் சேர்ந்த ஸானா நபீக்கின் விடுதலை தொடர்பில் அந்நாட்டு உலமாக்கள் மூலமாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, சம்பந்தப் பட்ட சவூதிஅரேபிய பெற்றோரிடம் மன்னிப்பு வழங்குமாறு இலங்கை மக்கள் சார்பாக கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ரிஸானா நபீக் விவகாரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இஸ்லாம் ஒவ்வொரு குற்றத்திற்குய தண்டனைகள் பற்றியும் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அத்துடன், அத்தண்டனையானது நிறைவேற்றப்படவேண்டும் என்ப தையும் கடமையாக்கியிருக்கின்றது. அத்துடன், சந்தேகத்திற்கிடமான விடயங்களில் அதனை நிவர்த்தி செய்து கொள்ளும் வழி முறைகளையும் கூறியுள்ளது. அந்த வகையிலேயே சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் ரிஸானா நபீக் என்பவரின் தண்டனையையும் நோக்க வேண்டியுள்ளது.

வீட்டுப் பணிப்பெண்னாக சென்ற ரிஸானா மூலம் தான் தனது குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது என அவ்வீட்டு எஜமான் விடாப்பிடியாக இருப்பதனால்தான் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ரிஸானாவின் விடுதலையானது இன்னும் இழுபறியாக இருக்கின்றது.
இது விடயத்தில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் தலையிட்டுள்ளதுடன் பல்வேறு தனி நபர்களும் பொது அமைப்புக்களும் சவூதி அரேபிய மன்னருக்கும் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கும் கோரிக்கைகளை அனுப்பி வைத்துள்ளன.

சவூதி அரேபிய உயர்நீதிமன்றமானது ரிஸானா நபீக்கை குற்றவாளியாக இனங் கண்டு “கொலைக்கு கொலை' என்ற அல் குர்ஆனின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கியுள்ளது. பொதுவாகவே சட்டத்தையும் நீதிமன்ற தீர்ப்பையும் மதித்து நடக்கவேண்டுமென்பது உலகம் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும்.

ஆதலால், அந்நாட்டில் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா அடிப்படையிலான ஷரி ஆ சட்டம் அமுலில் இருக்கையில் அதில் தலையிடும் அதிகாரம் அந்நாட்டு மன்னருக்கோ அல்லது வேறு எவருக்குமோ கிடையாது.

இத்தீர்ப்பை இரத்துச் செய்து மன்னிப்பை வழங்குவதற்கு உத்துடையோர் உயிழந்த குழந்தையின் பெற்றோரேயாவர். அந்த வகையிலேயே நாம் குறித்த பெற்றோரை அணுகி அவர் மூலம் ரிஸானாவுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். இந்நிலையில், ரிஸானாவுக்கு மன்னிப்பை வழங்குமாறு குறித்த பெற்றோரிடம் இலங்கை மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுப்பதுடன் மன்னிக்கும் மனப் பாங்கை அக்குழந்தையின் பெற்றோருக்கு வழங்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல