ஞாயிறு, 7 நவம்பர், 2010

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவர்களின் படிப்பிற்கு நடிகர் கருணாஸ் உதவி!

மக்கள் பிரச்சனைக்கு உள்ளாவதைப் போல, இங்கு இருக்கும் சில நடிகை நடிகர்களும் இலங்கைக்கு போனதாலும், போக முயன்றதாலும் பிரச்சனைகளில் சிங்கிக்கொண்டார்கள். அதில் கருணாஸும் ஒருவர். இந்த விமர்சனம் ஒரு புறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களிலும் உள்ள நன்றாக படிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களில் உயர் கல்விக்கு உதவி செய்திருக்கிறார் கருணாஸ்.

எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.பி.பி.எஸ் என படித்து வரும் இந்த மாணவர்களுக்கு சென்னை, மதுரை, திண்டுக்கல், கோவை என்று பல்வேறு கல்லூரிகளில் இவர்களை படிக்க வைத்து வருகிறார் கருணாஸ். தீபாவளியன்று இவர்களை அழைத்து புத்தாடை, இனிப்பு போன்றவற்றை வழங்கி இவர்களை இன்னும் சந்தோஷப்படுத்தியிருக்கும் கருணாஸுக்கு வாக்குறுதி ஒன்றையும் இந்த மாணவர்கள் கொடுத்திருக்கிறார்.

இவர்கள் படித்து வேலைக்குக்குப் போனப்பிறகு இவர்களுடைய சம்பளத் தொகையில் பத்து சதவீதத்தை இதேபோன்று அகதி மாணவர்களின் படிப்புக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த வாக்குறுதி.இதை விளம்பரத்திற்காக நான் சொல்லவில்லை. இதை பார்த்து வசதிப்படைத்தவர்கள் பலர் இதுபோல இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற காரணத்திற்காகதான் சொல்கிறேன். இனி இலங்கை அகதி மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அது அவர்களின் படிப்பாக மட்டும்தான் இருக்கும். எனவேதான் நான் இந்த உதவியை செய்ய முன்வந்தேன்" என்றார் கருணாஸ்.

அருகில் இருந்த இலங்கை அகதிகள் மறுவாழ்வுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு பேசுகையில், "எங்கள் குழந்தைகளை பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும்தான் அரசு படிக்க வைக்கிறது. நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்தாலும் அதற்கு மேல் படிக்க முடியாது. ஏனென்றால் மேற்படிப்பிற்கு உண்டான பணத்தை நாங்கள் கட்டினாலும் உங்களுக்கு இந்த பணம் எப்படி வந்தது? யார் கொடுத்தது? என்று அரசு விசாரணை செய்யும். இந்த காரணத்தினாலே பல மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு வரைதான் படிக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் கருணாஸ் தானே முன்வந்து மாணவர்களின் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டார்" என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல