ஞாயிறு, 7 நவம்பர், 2010

ஃபேஸ்புக்கில் பிரிட்டிஷ் மகாராணி

பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணி அவரது பெயரில் ஃபேஸ்புக் பக்கம் திறந்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ பக்கிங்ஹாம் அரண்மனை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இப்பக்கம் சாதாரண பேஸ்புக் பயனர்களின் பக்கங்களைப் போல மகாராணியின் சுயகுறிப்புகள் அடங்கிய பக்கமாக இருக்கமாட்டாது, பக்கிங்ஹாம் அரண்மனையில் மகாராணி மேற்கொள்ளும் அலுவல்களின் டயரி போல மட்டுமே இருக்கும் என்றும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மற்றைய ஃபேஸ்புக் பயனர்களைப் போல பிரிட்டிஷ் மகாராணியை யாரும் நண்பனாக (Friend) இனைத்துக்கொள்ள முடியாது. அதேபோல தமது நட்பு வளையத்துக்குள் வருமாறு மகாராணிக்கு யாரும் கோரிக்கை விடுக்கவும் முடியாது.

ஆனால், மகாராணியின் பக்கத்தை விருப்பப் பக்கமாக சேமித்துக் கொள்ளலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல