அத்தகையதொரு வேதனையைத் தரக் கூடிய தீர்ப்பை சகோதரி ரிசானா பெற்றிருப்பது ஜீரணிக்கக் கூடியதல்ல. ரிசானாவின் கவனவீனத்தால் குழந்தை யொன்று உயிரிழந்ததென்ற செய்தி எல்லோரையும் ஆழ்ந்த துயரத்துக்கு இட்டுச் செல்லும். எனினும் ஒரு துன்பம் நடந்துவிட்டது என்பதற்காக இன்னொரு துன்பத்தை தோற்றுவிப்பது மனுதர்மமாகாது.துன்பத்திலும் மன்னித்து வாழவிடுவதே மனிதப் பண்பின் சிறப்பு. அதேநேரம் பிரஸ்தாபக் குழந் தையை கொல்லவேண்டும் என்ற எண்ணம் ரிசானாவிடம் இம்மியும் இருந்திருக்க நியாயமில்லை.
எனவே தவறுதலாக இடம்பெற்ற அந்தத் துயரத்துக்காக இன்னுமொரு துயரத்தை மானிடம் வழங்குமாயின் இந்த உலகில் தெய்வீக நம்பிக் கைகள் பலவீனப்பட்டுவிடும்.மரணத்தை ஏற்படுத்துவது என்பதில் ‘நோக்கம்’ பற்றியும் நோக்குவது அவசியம். அதாவது மருத்துவர் ஒருவர் நோயாளி ஒருவருக்கு அறுவைச் சிகிச்சை செய்கிறார். அறு வைச்சிகிச்சையின் போது அந்த நோயாளி இறந்து விடுகிறார். அறுவைச்சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தால் அந்த நோயாளி சிலகாலம் வாழ்ந்திருக்கக்கூடும். இந்நிலையில், நோயாளியின் மர ணத்திற்கு சத்திரசிகிச்சை செய்த டாக்டரே காரணமென்று கூறி அவரை சிறையிலடைக்கும் வழமைகள் எதுவும் கிடையாது.
இங்கு குறித்த மருத்துவரின் நோக்கம் பற்றியே சிந்திக்கப்படுகின்றது. நோயாளியைக் காப்பாற்றுவதே அவரின் நோக்கம். எனவே மரணத் திற்கான குற்றம் அவரை அணுகாது. இதுபோன்றதுதான் ரிசானாவின் சம்பவமும். குழந்தைக்குப் பால்கொடுக்க நினைத்தமை குழந்தையின் பசி போக்கும் நோக்குடையது.அந்த நல்ல நோக்கு துரதிர்ஷ்டமான முடிபைத் தந்துவிட்டது. அந்த முடிபை அடிப்படையாகக் கொண்டும் ரிசானாவின் வயது மற்றும் உறவுகளை விட்டு நாடுகடந்து தனித்திருந்து வீட்டு வேலைகளைக் கவனித்ததினால் ஏற்படக்கூடிய மனநிலை என்பவற்றையும் கருத்திற் கொண்டு ரிசானாவிற்கு சவுதி அரசு பொது மன்னிப்பு வழங்கவேண்டும்.
இந்த மன்னிப்பை வழங்குவதன் மூலம் சவுதி அரசு தனது பெரும்தன்çமையை நிரூபித்துக் காட்டமுடியும். ரிசானாவின் விடுதலைக்காக நாமும் குரல் கொடுப்போம். பிரார்த்திப்போம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக