செவ்வாய், 2 நவம்பர், 2010

சாதனை மாணவர்களில் ஒருவராக தமிழ் சிறுமி!

ஜேர்மனியின் தேசிய மட்ட கல்விச் சாதனையாளர்களில் ஒருவர் என்கிற பெருமை இலங்கைத் தமிழ் மாணவியான வீரசிங்கம் துர்க்கா (வயது 17) என்பவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

“talent in the country” என்கிற அங்கீகாரத்தை இவ்வருடம் அங்கு பெற்றிருக்கும் 50 மாணவர்களில் இவரும் ஒருவர்.

சராசரி மாணவர்களை விட அதி கூடிய திறமை உடையவர்கள் என்று இவர்கள் 50 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜேர்மனை தளமாக கொண்டு இயங்கும் Robert Bosch and Baden-Württemberg Foundation என்கிற சர்வதேச புகழ் வாய்ந்த உயர்கல்வி ஸ்தாபனத்தால்தான் இப்பெருமையும், அங்கிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

துர்க்கா இந்நிறுவனத்தின் புலமைப் பரிசிலுடன் உயர்கல்வியை தொடர முடியும். துர்க்கா தற்போது Heidelberg இல் உள்ள business school of the Willy-Hellpach school இல் பயில்கின்றார்.

துர்க்காவின் பெற்றொர் இலங்கைத் தமிழர்களாக இருந்தாலும் துர்க்கா ஜேர்மனியில்தான் பிறந்தவர். Walldorf நகரத்தில் வசிக்கின்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல