செவ்வாய், 2 நவம்பர், 2010

பஹ்ரைனின் முதல் பெண் கவுன்சிலர் பாத்திமா

பஹ்ரைன் நாட்டில் முஹாரக் முனிசிபல் கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் பாத்திமா சல்மான் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் பஹ்ரைன் நாட்டின் முனிசிபல் முதல் பெண் கவுன்சிலர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாத்திமா. மேலும் வளைகுடா நாடுகளின் முனிசிபல் முதல் பெண் கவுன்சிலரும் பாத்திமா சல்மானே.

முஹாரக் முனிசிபல் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது ஆரம்பத்தில் இருந்தே பாத்திமா முன்னணியில் இருந்தார். முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 28.8 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருந்தார். இறுதியாக 52.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார்.

பஹ்ரைன் முனிசிபல் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பாத்திமா சல்மான் வரலாறு படைத்துள்ளார். இதுகுறித்து கூறும் பாத்திமா சல்மான், இதுபோன்ற சாதனையை பஹ்ரைனில் உள்ள ஒவ்வொரு பெண்ணாலும் படைக்க முடியும் என்றார்.

சுயேச்சையாக முனிசிபல் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்ட பாத்திமா சல்மான் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்றே அந்த முனிசிபலில் பெரும்பாலோரின் கருத்தாக இருந்தது. எனினும் இதைப்பற்றி எல்லாம் பாத்திமா கவலைப்படவில்லை. சோர்ந்திடவில்லை. தேர்தல் களத்தில் தொடர்ந்து மக்கள் ஆதரவைத் திரட்டி வெற்றி வாகை சூடினார்.

பாத்திமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்பது தெரியும். நான் செய்த சமூக சேவையை மக்கள் அங்கீகரித்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மன்னர் வாழ்த்து: முனிசிபல் தேர்தலில் வெற்றி பெற்ற பாத்திமா சல்மானுக்கு பஹ்ரைன் நாட்டு மன்னர் ஹமத் பின் இசா அல் காலிபா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர் வாழ்த்துகளை கூறினார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல