செவ்வாய், 28 டிசம்பர், 2010

தனது பணம் காரணமாக இளைஞர்கள் விலகிப்போய்விடுவரோ எனக் கலங்கும் 20 வயது நடிகை

20 வயதிலேயே உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார் எம்மா வட்ஸன். ஹரிபொட்டர் திரைப்படத்தில் நடித்த எம்மா வட்ஸன் இதுவரை 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளார்.

இவ்வளவு பெருஞ்செல்வம் இளம் பெண்ணின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மாத்திரம்தானே ஏற்படுத்தும் என்றால், இல்லையென்கிறார் எம்மா.

அந்த பணமே தனக்கு வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி விடுமோ என அவர் அஞ்சுகிறார்.

தனது காதலராக வாய்ப்புள்ள இளைஞர்கள் தனது செல்வச்செழிப்பு காரணமாக தன்னிடமிருந்து விலகிப் போய்விடக்கூடும் எனவும் அதனால் தனக்கு காதலர் ஒருவர் கிடைக்காமல் போய்விடலம் என கவலை கொள்கிறார் எம்மா.

"என்னிடமுள்ள பணம் இளைஞர்களை அசௌகரியத்துக்குள்ளாக்கிவிடும் என எண்ணுகிறேன். உறவுகளில் பணம் சிக்கலை ஏற்படுத்தி விடலாம். நான் இதில் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். என் விடயத்தில் உறவுகளில் இது சிக்கலை ஏற்படுத்தாது என நம்புகிறேன்" என எம்மா வட்ஸன் கூறியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல