புதன், 29 டிசம்பர், 2010

கருணாவின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது

பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது கருணா வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக புலிகளுக்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் நோர்வே அரசாங்கம், புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பாரியளவு நிதியை வழங்கியதாக கருணா தெரிவித்திருந்தார்.

எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கடந்த காலங்களிலும் கருணா இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார் எனவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக இவ்வாறான பிழையான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல