புதன், 29 டிசம்பர், 2010

இஸ்ரேலுக்காக உளவு பார்த்தவர் தூக்கில் போடப்பட்டார்

ஈரான் நாட்டை சேர்ந்தவர் அலி அக்பர் சியாதத். இவர் 2004-ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாத் உடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் தன் மனைவியுடன் ஈரானை விட்டு வெளியேற முயன்றபோது இவரை போலீசார் கைது செய்தனர். இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டபோது இவர் கோர்ட்டில் அளித்த சாட்சியத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஈரான் ராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை இஸ்ரேலுக்கு தெரிவித்ததாக ஒப்புக்கொண்டார். இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை எவின் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல