வியாழன், 16 டிசம்பர், 2010

முகத்தில் ஆசிட் வீசியவருக்கு கண்ணில் ஆசிட் ஊற்றி தண்டனை

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஈரானில் கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்படுகிறது. கள்ளக்காதலில் ஈடுபட்டால் கல்லடி  பரிசாக கிடைக்கும். ‘கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்’ என்ற விதிமுறைப்படிதான் அங்கு தண்டனை வழங்கப்படுகிறது. இதற்கு உலக  நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் அடிக்கடி கண்டனம் தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில் ஆசிட் வீசிய ஒருவருக்கு,  கண்ணில் ஆசிட் ஊற்றி தண்டனை நிறைவேற்றும்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈரானின் குவாம் நகரைச் சேர்ந்த மொஜ்தபா என்பவருக்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் அலிரெசா என்பவரின் மனைவி மொஜ்தெக் என்பருடன்  கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் மொஜ்தபாவுக்கும், அலிரெசாவுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. அலிரெசாவின் முகத்தில் ஆசிட்  வீசினார் மொஜ்தபா. படுகாயம் அடைந்த அலிரெசா பார்வை இழந்தார். இச்சம்பவம் தொடர்பான வழக்கில் மொஜ்தபாவின் கண்களை ஆசிட்  ஊற்றி குருடாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசிய சக மாணவனின் கண்கள், கடந்த  ஆண்டு பிப்ரவரி மாதம் ஆசிட் ஊற்றி குருடாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல