ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி (35). ஆங்கில நடிகர் ஜானி லீ மில்லர் (1996-99), ஹாலிவுட் நடிகர் பில்லி பாப் தான்டன் (2000-03) ஆகியோரை திருமணம் செய்து சில காலம் குடும்பம் நடத்தினார். 2 டைவர்ஸ்களுக்கு பிறகு 2005ம் ஆண்டு முதல் ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான பிராட் பிட்டுடன் வசித்து வருகிறார். மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். ‘பிரேஞ்சலினா’ என்று மீடியாக்கள் குறிப்பிடும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது இவர்களது உறவு.
இந்நிலையில், புத்தாண்டு பிறந்ததும் இந்துமத முறைப்படி இந்தியாவில் திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இவர்களது ஆன்மீக குரு ராம்லால் சியாக் (84) என்பவர் தலைமையில் திருமணம் நடக்க இருக்கிறது.சில காலம் முன்பு இருவருக்கும் உரசல்கள் வந்தபோது இவர்தான் உபதேசங்கள் சொல்லி சமாதானப்படுத்தினாராம். இவர் சொன்ன தியானம், யோகம் ஆகியவற்றை செய்துவரும் பிரேஞ்சலினா ஜோடி தினமும் காலை, மாலை சுத்தபத்தமாய் ஒரு மந்திரமும் சொல்லி வருகிறார்களாம். அபரிதமான பற்று ஏற்பட்டதால் இந்துமத சம்பிரதாயப்படியே கல்யாணம் செய்துகொள்ள இருக்கின்றனர் என்கின்றது பிரேஞ்சலினா வட்டாரம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக