39 வயதான அரசரட்ணம் சுரேஸ்குமார் சில நாட்களுக்கு முன்னர் கனாடாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். கனடா குடியுரிமையைப் பெற்றுள்ள இவர் இந்திய பெண்ணொருவரைத் திருமணம் செய்து இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்தியாவிலும் கனடாவிலும் இவருக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சகோதரனின் வீட்டிற்கு வந்த இவர் இன்று காலை பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
படுக்கை விரிப்பைக் கொண்;டு இவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், இந்த மரணம் தொடர்பில் கொட்டாஞ்சேனைப் பொலிஸார் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் 20 ஆண்டுகளுக்க முன்னர் இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தின் போது குடிபெயர்ந்து கனடா சென்றமைக் குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக