ஞாயிறு, 30 ஜனவரி, 2011

ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் அபூர்வ புகைப்படங்கள் ஏலம்! இந்த புகைப்படம், 22 லட்ச ரூபாய்க்கு ஏலம்போனது.

ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரும், இத்தாலி சர்வாதிகாரி முசோலினியும் சந்தித்துப் பேசிய அபூர்வ புகைப்படம் லண்டனில் ஏலம் விடப்பட்டது. ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் தனிப்பட்ட போட்டோகிராபராக பணியாற்றியவர் ஹென்ரிச் ஹாப்மேன்.

இவர் ஹிட்லரை பல்வேறு கோணங்களிலும், முக்கிய சந்திப்புகளின் போதும் எடுத்த 600 புகைப்படங்களும், 800 நெகட்டிவ்களும் பாதுகாக்கப்பட்டு வந்தன. அவற்றில் உள்ள சில போட்டோக்களை லண்டன் ஏல நிறுவனம் ஒன்று அண்மையில் ஏலம் விட்டது.

இரண்டாம் உலகப்போரின் போது, ஹிட்லரும், இத்தாலி சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும், ஜெர்மனியின் முனிச் நகரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, அவர்களை ஹாப்மேன் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார். அந்த அபூர்வ புகைப்படம் லண்டன் ஏல நிறுவனத்தால், அண்மையில் ஏலம் விடப்பட்டது.

 இந்த புகைப்படம், 22 லட்ச ரூபாய்க்கு ஏலம்போனது. இந்த போட்டோக்கள் தவிர, பள்ளி ஒன்றில் பயிற்சியில் ஈடுபடும் ஹிட்லர், படை வீரர்கள் மத்தியில் சல்யூட் அடிக்கும் ஹிட்லர் உள்ளிட்ட பல்வேறு அபூர்வ புகைப்படங்கள் ஏல நிறுவனத்தில் உள்ளது.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல