ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மனைவியை தவிர்த்துவிட்டு செக்ஸ் பொம்மைகளுடன் உல்லாசப் பயணம்

கனடாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, ஆளுயர செக்ஸ் பொம்மைகளுடன் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உல்லாசப் பயணம்  மேற்கொண்டுள்ளார்.

டேவ் ஹொக்கி எனும் 57 வயதான நபரே இவ்வாறு 6 பாலியல் பொம்மைகளுடன் பயணம்செய்துள்ளார். மேற்படி பொம்மைகள் தயாரிப்பு நிறுவனத்திற்காக அவர் இப்பயணங்களை மேற்கொள்கிறார்.
அவர் தனது போலி 'நண்பிகளுடன்' கிறேட்  கென்யோன் மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சி உட்பட பல இடங்களுக்கு இதுவரை சென்றுவந்துள்ளார்.

2,000 ஸ்ரேலிங் பவுண் விலையுள்ள இந்த சிலிக்கன் பொம்மைகளுடன்  களியாட்ட பூங்காக்கள்,  குதிரைச்சவாரி நிகழ்வுகளுக்குச் சென்றதை அவர் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
ஏனைய பொம்மைகளின் உரிமையாளர்களுடன் தான் கலந்துரையாடியதையும் அவர் பதிவு செய்துள்ளார். 16,000 ஸ்ரேலிங் பவுண் செலவிலான பயணம் குறித்து தனது மனைவி ஆட்சேபிக்கவில்லை என டேவ் ஹொக்கி கூறுகிறார்.

இரண்டு பிள்ளைகளின்  தந்தையான அந்நபர் இது குறித்து விளக்குகையில், 'இது ஒரு பொழுதுப்போக்கு என்பதை எனது மனைவி அறிவாள். அவள்  இந்த பொம்மைகள் குறித்து அஞ்சுவதில்லை. 80 இறாத்தல் எடையுடை இந்த சிலிக்கன் பெண் பொம்மையுடன் நான் ஓடிவிட மாட்டேன் என்று மனைவிக்குத் தெரியும்' என்கிறார்.

அவர் இந்த பொம்மைகளுக்காக 1,270 ஸ்ரேலிங் பவுண்  பெறுமதியான  ஆடைகள், அணிகலன்களையும்  வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'நான் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வாங்கினேன். அவைகள் மிகவும் அழகாக இருந்தன. அவை அழகில்லை என்று யாராவது சொன்னால் பொய் சொல்கிறார்கள் என எண்ணுகிறேன்' என்கிறார் டேவ் ஹொக்கி.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல